சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை இல்லை! கமிஷனருக்கு அபராதம்

Mozhi MurasuMozhi Murasu
1 min read

சென்னை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த அபராதம் அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, புற்றுநோய் மையத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
Subscribe to my newsletter

Read articles from Mozhi Murasu directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

Mozhi Murasu
Mozhi Murasu