திமுகவில் நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு சாக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ க.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயல...