AI உதவியுடன் கடனை அடைத்த சாதனை! ChatGPT வழிகாட்டிய அமெரிக்க பெண்

Puthiya PaarvaiPuthiya Paarvai
1 min read

செயற்கை நுண்ணறிவு (AI) வெறும் தகவலுக்கான கருவி மட்டும் அல்ல, வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறி வருவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜெனிபர் ஆலன் என்ற பெண், AI வழிகாட்டுதலுடன் தனது ரூ.10 லட்சம் கடனை (அல்லது $23,000) வெற்றிகரமாக 30 நாளில் அடைத்துப் பெரும் சாதனை படைத்துள்ளார்.

36 வயதான ஜெனிபர், ரியல்டரும், கன்டென்ட் கிரியேட்டருமான இவர், ChatGPT வழங்கிய சிக்கலற்ற மற்றும் நடைமுறை செலவுக்கழிப்பு ஆலோசனைகளை பின்பற்றி இந்த ஆச்சரியமான முடிவை அடைந்துள்ளார்.

நீண்ட கால பண மேலாண்மை சிக்கல்கள்:

ஜெனிபர் கூறுகையில்,

“நான் பணத்தை தவறாக நிர்வகித்து வந்தேன். போதுமான சம்பளம் இருந்தும் சேமிக்க முடியவில்லை. காரணம் — சிறுவயதில் பொருளாதாரக் கல்வி இல்லாதது.”

ஒரு குழந்தையை பெற்ற பிறகு, அவரது செலவுகள் மேலும் அதிகரித்து கடனை மேலாண்மை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

AI வழிகாட்டுதலால் மாற்றம்:

ChatGPT வழங்கிய:

  • செலவுகளுக்கான இலக்குகள் அமைத்தல்

  • தேவையற்ற பணப்புழக்கத்தை அடையாளம் காண்தல்

  • வாராந்திர செலவுக் கணக்கீடு மற்றும் கட்டுப்பாடு
    போன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து அவர் கடனை கட்டியுள்ளார்.

“என் வாழ்க்கையில் மிகப்பெரிய நிதிசார்ந்த வெற்றியென்றால் இதுதான். எனக்கு புதிய அதிகாரம் கிடைத்த மாதிரி இருக்கிறது,” என உற்சாகமாக கூறுகிறார் ஜெனிபர்.

இந்த சம்பவம், AI திறனைச் சரியாக பயன்படுத்தினால் பண மேலாண்மை, வாழ்க்கை திட்டமிடல் ஆகியவற்றிலும் முக்கிய முன்னேற்றம் காணலாம் என்பதை வலியுறுத்துகிறது.

0
Subscribe to my newsletter

Read articles from Puthiya Paarvai directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

Puthiya Paarvai
Puthiya Paarvai