நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: கணவர் மோகன் குப்தா தொடர்பாக விசாரணை தீவிரம்

Mozhi MurasuMozhi Murasu
1 min read

80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, அவரது கணவர் மோகன் குப்தா நடத்தும் நிறுவனம் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியாக நடைபெற்று வருகிறது.

நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜா இயக்கிய "கல்லுக்குள் ஈரம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து சிவப்பு மல்லி, முதல் மரியாதை, நீதி பிழைத்தது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அருணா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

அருணாவின் கணவர் மோகன் குப்தா, உள்கட்டமைப்புத் துறையிலான அலங்காரப் பணிகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையின் நீலாங்கரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத நிதி பரிமாற்றம் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் அருணா மற்றும் மோகனின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் இருவரையும் நேரில் விசாரித்துள்ளனர். சோதனை முடிவடைந்த பின்னர், வழக்கு பதிவு செய்யப்படுமா அல்லது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகலாம்.

0
Subscribe to my newsletter

Read articles from Mozhi Murasu directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

Mozhi Murasu
Mozhi Murasu